திங்கள், 15 செப்டம்பர், 2014

தாய்வாக்கு - 100


அடுத்தவர் பேச்சை அவமதித்து பேசாதே - மகளே 
தோசமாய் விழும் துயரம் 

தாய்வாக்கு - 99


சந்தேகக் காரர்களுடன் சந்தோசமாய்  வாழ் - மகளே 
குணமுள்ள இதயத்தின் செயல்

தாய்வாக்கு - 98



பசித்தவருக்கு முன்பு உண்டு மகிழாதே - மகளே 
விரைவில் இழப்பாய் சுகம் 



தாய்வாக்கு - 97



சான் மனதை மதித்து வாழ் - மகளே 
உயர்வு பெரும் மனசு 

தாய்வாக்கு - 96


உள்ளத்து அன்பை பாசமாய் பேனு -மகளே 
நட்புள்ளத்தின் கடமை அது 

தாய்வாக்கு - 95


இதயத் பூமியில் ஊற்றெடுக்கும் கவிதை - மகளே 
தாகத்தை போக்கும் ஊற்று 

தாய்வாக்கு - 94


ஏழை விடும் கண்ணீர் வெந்து சுடும் - மகளே 
சந்தோஷ வாழ்வை மாற்று  

தாய்வாக்கு - 93


வாழ்ந்து காட்டுவது வாழ்வின் உயர்வு - மகளே 
வீழ்ந்து விடாது நிற்பது வீரம் 

தாய்வாக்கு - 92


இதயத்தில் இல்லா  திருமறை மனனம் - மகளே 
உதயத்தை கானா இருள் 

தாய்வாக்கு - 91



உன்னை மறந்து வாழும் உள்ளத்தை நினைத்துக் கொண்டு -மகளே 
உன்னை நினைத்து வாழும் உள்ளத்தை மறந்து விடாதே .....!

தாய்வாக்கு - 90


இதயம் என்பது ஒரு கண்ணாடி - மகளே 
உடையாது பார்த்துக் கொள் நல்லபடி 

தாய்வாக்கு - 89



ஏழை மாணவனுக்கு அறிவு கொடுத்தல் - மகளே 
உதய சூரியனின் சுடர் 

தாய்வாக்கு - 88


குப்பைகளை கிளரும் கோழியாய் இருக்காதே - மகளே 
மாணிக்கம் தோண்டும்  கரமாய் மாறு 

தாய்வாக்கு - 87



பிரசவத்தை அனுபவித்துப் பார் - மகளே 
இலக்கியவாதிகளின் பிரசுர வேதனை புரியும் 

தாய்வாக்கு - 86




வறுமையின் இருளை அகற்று - மகளே 
வெளிச்சம் பெறுவாய் வாழ்வில் 

தாய்வாக்கு - 85



நோன்பினை நோற்றுப் பார் - மகளே 
ஏழைகள் பசி உணர்வாய்

தாய்வாக்கு - 84



இன்மையில் நன்மைகளை தேடிக்கொள் - மகளே 
மறுமையில் கிடைப்பது சுவர்க்கமாகும் 

தாய்வாக்கு - 83



நீ நீயாக வாழ் - மகளே 
இறை அருள் பெறுவாய் 

தாய்வாக்கு - 82



மதிக்காதவர் இல்லம் - மகளே 
மிதிக்காதே உன் பாதம் 

தாய்வாக்கு - 81



இளமையை வீணாக்காது படி  -  மகளே 
முதுமை அறிவு தரும் 

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

தாய்வாக்கு - 80



எதையும் எதிர்பார்த்து காத்திருக்காதே - மகளே 
ஏமாற்றங்கள் கனவுகளுக்குச் சமன் 

தாய்வாக்கு - 79



நற்குணத்தை மூச்சுக்களாய் சுவாசித்து வாழ் - மகளே 
தீய குணத்தை உமிழ்நீராய் துப்பிவிடு 

தாய்வாக்கு - 78



வேற்றுமை காண்பது மதத்தால் அல்ல - மகளே 
மனித மனங்களாலேயே நம்பு 

தாய்வாக்கு - 77



வேற்றுமை காட்டி வாழாதே - மகளே  
ஒற்றுமை காட்டி ஜெயம் பெறு 

தாய்வாக்கு - 76


பேசும் பேச்சுக்களை குறைத்துப்பேசு  - மகளே 
நற் செயல்களை அதிகரித்து வாழு

தாய்வாக்கு - 75



இயலாமையை உதறி வீசு - மகளே 
முயற்சியை செயல்களில் எடு 

தாய்வாக்கு - 74



இறவாத புகழும் , இரங்குகின்ற மனமும் - மகளே
வாழ்வில் உன்னை உயர்த்தும்

தாய்வாக்கு - 73



நல்லொழுக்கம், வாழ்க்கையின் வெற்றி - மகளே   
தீயொழுக்கம் தீர்வில்லாத் துன்பம்

தாய்வாக்கு - 72



உண்மைக்கு குரல் கொடு - மகளே 
பொய் வறுமையின் கோடு

தாய்வாக்கு - 71


தீயவர்களை நல்லவராக பார் - மகளே 
பகைமையானவர்   நண்பராகி விடுவார்

சனி, 6 செப்டம்பர், 2014

தாய்வாக்கு - 70



கற்பு, மானம், மரியாதை உன்னுயிர் - மகளே 
வரம்பு மீறாது வாழு

தாய்வாக்கு - 69



தற்பெருமை அழிவை நோக்கும் - மகளே 
பொறுமை நிறைவு தரும் 

தாய்வாக்கு - 68



குற்றங்களைத் துருவிப் பார்க்காதே - மகளே 
நல்லவற்றை செயலில் காட்டு

தாய்வாக்கு - 67



குடும்ப உறவை மதித்து வாழு - மகளே 
உன்னதமார்க்கம் இஸ்லாத்தின் கட்டளை 

தாய்வாக்கு - 66



பேச்சுக்களை அவதானமாய் பேசு  - மகளே 
குளிர்ச்சி மகிழ்ச்சி தரும் 

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

தாய்வாக்கு - 65



ஏழ்மையாக வாழ்ந்து பார் - மகளே 
அண்ணலார் வழி புரிவாய் 

தாய்வாக்கு - 64



சொல்லக் கூடாத (பிறர் ரகசியத்தை) யாருக்கும் சொல்லாதே - மகளே 
 மௌனம் நிம்மதி தரும் 

தாய்வாக்கு - 63



கல்விற்கு எதிர் நீச்சல் உண்டு.- மகளே 
போராடி வெற்றி பெறு 

தாய்வாக்கு - 62



சோம்பல் எனும் களைபிடுங்கி விடு - மகளே
வெற்றியை அறுவடை செய் 

தாய்வாக்கு - 61


அறிவை மற்றவருக்கு பகிர்ந்து கொடு - மகளே
கற்றவர் மத்தியில் மதிக்கப்படுவாய் 

தாய்வாக்கு - 60



நல்ல செயலை கடை பிடி - மகளே 
நல்ல பலனைப் பெறுவாய் 

தாய்வாக்கு - 59



தீர விசாரித்து உண்மையைப் பெறு - மகளே  

பொய்யைக் கேட்டு தீர்ப்பு வழங்காதே 

தாய்வாக்கு - 58



நயவஞ்சகக் குணம் வேண்டாம் - மகளே 
இதயத்தை துளைக்கும் செயல்  

தாய்வாக்கு - 57



தூய்மையான இதயம் தௌபா - மகளே 
ஒழுக்கத்தின் நிழல் பெறு 

தாய்வாக்கு - 56


இளமையில் கல்வி கற்பது - மகளே 
முதுமை வாழ்வினை காக்கும் 

தாய்வாக்கு - 55



உரிமையையை இழந்து விடாதே - மகளே 
உணர்வை பாது காப்பாய்

தாய்வாக்கு - 54



செல்லும் வழியை தெரிந்து கொள் - மகளே 
நாடும் இடத்தை அறிந்து கொள்வாய்

தாய்வாக்கு - 53



அன்பு என்னும் உள்ளத்தை காட்டு - மகளே 
அறிவு உன்னை நேசித்து வரும் 

தாய்வாக்கு - 52



நட்பு என்பது ஒரு பள்ளிக் கூடம் - மகளே 
நல்லவற்றை தேடிச் செல்

தாய்வாக்கு - 51


கோபமாய் யாருடனும் இருக்காதே - மகளே 

அறிவு ஆத்திரத்தில் புதையும்