புதன், 4 பிப்ரவரி, 2015

தாய் வாக்கு - 120



வரம்பு மீறி வாழாதே - மகளே 
பெற்றவர்களை பேணி வாழு ..!

தாய் வாக்கு - 119



மதங்களை வேறுபடுத்திப் பார்க்காதே - மகளே 
குணங்களை ஒன்று சேர்த்துப் பார் ..!

தாய் வாக்கு - 118




பகுத்தறிவு மனிதனுக்கு உயிர்நாடி - மகளே .
மூடநம்பிக்கை பேரழிவின் பிரதிநிதி 

தாய் வாக்கு - 117



பிற உயிர்களிடம் கருணை காட்டு - மகளே 
அல்லாஹ்வின் அருள் பெறுவாய் 

தாய் வாக்கு - 116



உரிமைகளைப் விட கடமைகள்  முக்கியம்.- மகளே 
இறைவனை தொழுது நன்மை பெறு 

தாய் வாக்கு - 115



ஆடம்பரம் இல்லாமல் வாழ் - மகளே 
நிம்மதி பெறுவாய் வாழ்வில் 

தாய் வாக்கு - 114


தருமங்களைச் செய்து பிறருக்காக வாழ் - மகளே 
சுடர் பெரும் வாழ்வு 

தாய் வாக்கு - 113



நல்ல பண்புகளை நாடு - மகளே 
தீய பண்புகளை நாடி விடாதே 

தாய் வாக்கு - 112



உள்ளத்தில் அணுவளவும் தற்பெருமை வளர்க்காதே - மகளே 
சுவர்க்கம் நுழைவது கஷ்டம் 

தாய் வாக்கு - 111



மற்றவர்களின் வாழ்க்கையோடு உன் வாழ்க்கையை ஒப்பிடாதே - மகளே 
பொறாமை வீண் பலி சுமக்கும் 

தாய் வாக்கு - 110



சோம்பல் எனும் களைபிடுங்கி விடு - மகளே 
வெற்றியை அறுவடை செய்

தாய் வாக்கு - 109



கனவிலும் இயலாப் பணிகள் பலதையும் - மகளே 
நினைவாய்ச் செய்தலும் எளிமையென்பேன்!

தாய் வாக்கு - 108



எண்ணிய எண்ணத்தை  அழகாய் முடித்துவிடு - மகளே 
பண்ணிய புண்ணியம் துணையாய் நிற்கும்

தாய் வாக்கு - 107




உறுதியும் ஊக்கமும் உதவி செய்யும் - மகளே 
ஊழ்வினைதானும் உருண்டே செல்லும்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

தாய் வாக்கு - 106



நேர்மையும் நியாயமும் நிரம்பி இருந்தால் - மகளே 
வாழ்வில் வெற்றி இனிதாய்க் கிட்டும்....!

தாய் வாக்கு - 105



பெருமை பேசி வாழ்வோரை விடவும் - மகளே 
பொறுமை காத்துப் பழகு.....!

தாய் வாக்கு - 104



வலது கண்ணில் நீர் வடிந்தால் இடது கண்ணும் சேர்ந்தழும் - மகளே 
தன்னால் உணர்வதுவே நட்பு

தாய் வாக்கு - 103



அன்பை பெற்று வாழ் - மகளே 
வம்பை பெற்று வாழ்ந்திடாதே....! 

தாய் வாக்கு - 102



பெரியவர் பேச்சை உதாசீனம் செய்யாதே - மகளே  
அதிக பேச்சு சூழும் இழுக்கு.....!

தாய் வாக்கு - 101



இருகை இருகால்கள் உழைத்தாலும் - மகளே 
ஒருகைதான் பெறும் கூலி ....!